1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (14:21 IST)

செரிமான பிரச்சனைகளை நீக்கி குணப்படுத்தும் குதிரைவாலி அரிசி !!

Kuthiraivali rice
குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும் உதவுகிறது.


குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை வளமான அளவில் உள்ளது. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட ஆறு மடங்கு நார்ச்சத்து குதிரைவாலி அரிசியில் உள்ளது. மேலும் கால்சியம், பீட்டா கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் ஆகிய சத்துக்களையும் உள்ளடக்கியது.

இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க நினைப்பவர்கள் குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம். ஏனெனில் இதற்கு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.

குதிரைவாலி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் செரிமான பிரச்சனைகள், ரத்தசோகை நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

குதிரைவாலி அரிசி சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி கொண்டது. இதனால் குதிரைவாலி அரிசியை உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற உப்புகளை கரைக்க உதவுகிறது.

குதிரைவாலி அரிசியில் பீட்டா கரோட்டின் சத்து வளமான அளவில் இருப்பதால் கண் சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.