1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் பலன்கள்...!!

வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும். 
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 
வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர்கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர்.
 
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக்  கொள்ளலாம்.
 
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல்  பலம் பெறும்.
 
சிறுநீரக பாதையில் எரிச்சல், நோய் தொற்று, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதற்கு வாழைத்தண்டு மட்டுமே சிறந்த மருந்தாக இருந்து அந்தக் கல்லை கரைக்க செய்கிறது. 
 
சிறுநீரை பெருக்க செய்வதோடு நீர் சுளுக்கால் அவதியுறுபவர்களுக்கு கை கண்ட பக்க விளைவு இல்லாத உடனடி நிவாரணமாக  வாழைத்தண்டு இருக்கிறது.