குழந்தை பேறு கிடைக்க சில இயற்கை வைத்தியமுறைகள்..!!
குழந்தை பேறு கிடைக்காமம் போவதற்கு காரணம், உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்என்று பல விஷயங்கள் கூறிக்கொண்டே போகலாம். முக்கிய காரணம், மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிப்பதில் சிக்கல் வரும்.
மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்று கண்டறிந்து விட்டால் இனி பிரச்சனை சுலபம். அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிப்பதற்கு இயற்கை வைத்தியமுறைகள் உள்ளது.
இயற்கை வைத்தியமுறைகள்:
1. அரை லிட்டர் பசும்பால், கால் கிலோ மலைப் பூண்டு, பனங்கற்கண்டு. முதலில் பூண்டை உரித்து பாலில் போட்டு வேகவைத்து நன்கு சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இதனை மாதவிலக்கான நாட்களிலிருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது நல்லது.
2. பசும் மஞ்சளை அரைத்து எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து கலந்து சாப்பிடலாம். இதனை மாதவிலக்கான முதல் 3 நாட்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் இரண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
3. உடம்பில் ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் தினமும் சின்ன வெங்காயத்தை பச்சையா சாப்பிட்டு வந்தால் ஊளைச் சதை குறையும்.