செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (17:44 IST)

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அஸ்வகந்தா !!

சரியான தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த அஸ்வகந்தா மூலிகை சிறந்த மருந்தாகும். இதற்கு அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் முகத்தில் உண்டாகும் தோல் சுருக்கங்கள் மாறி நீண்ட காலத்திற்கு இளமையை பேண முடியும். மூட்டுவலி உள்ளவர்கள் பாலில் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் மூட்டுவலி தீரும்.

தினமும் காலை மற்றும் மாலை 1/4 தேக்கரண்டி அஸ்வகந்தாவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் நாடி நரம்புகளும் வலுவடையும். இரத்த கொதிப்பை குறைப்பதில் இந்த மூலிகை சிறப்பாக செயல்படும்.

தினமும் சிறிதளவு அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி உண்டாவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும்.

சிறிதளவு அஸ்வகந்தா தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெண்கழிவு பிரச்சனை மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு அஸ்வகந்தா சிறந்த மருந்தாகும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதுமட்டுமில்லாமல் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி இந்த அஸ்வகந்தா மூலிகைக்கு உண்டு.