திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முடி நன்கு அடர்த்தியாக வளர பயன்படும் ஆளி விதை...!!

ஆளி விதை ரத்தக் குழாய்களில் பலவிதமான கொழுப்புகள் படியாமல் இருப்பதை தடுக்க செய்கின்றது. இதன் காரணமாக மாரடைப்பு வராமல் இருக்கும்.
 

ஆளி விதையை உணவில் உபயோகிப்பதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க செய்கின்றது. இதில் கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து மற்றும் கரையும் தன்மை அற்ற நார்ச்சத்து என இரண்டு வகைகள் உள்ளது. இது மலச்சிக்கலை தடுக்கும்.
 
சருமத்திற்கும், முடிக்கும் ஏராளமான நன்மைகளை இது தருகின்றது. ஆளி விதையை முடிக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம்.
 
ஆளி விதை எண்ணெயை எடுத்து உங்கள் முடிக்கு மசாஜ் செய்து வரலாம். கூந்தல் முழுவதுமாக எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தவுடன் 20 நிமிடம் கழித்து முடியை ஆசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முடி நன்கு அடர்த்தியாக வளர செய்யும்.
 
ஆளிவிதை ஜெல்: தேவையான பொருட்கள், ஆளி விதை எண்ணெய் - 1/4 கப், நீர் - 2 கப், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆளி விதை எண்ணெய்யும், தண்ணீரையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்பு அது கெட்டியாகும் வரை சூடாக்கி, இறுதியில் எலுமிச்சை சாற்றை அதனுடன் சேர்த்து கலக்க  வேண்டும். கெட்டியாகும் இந்த ஜெல்லை எடுத்து ஆறவைத்து உங்கள் முடிக்கு தடவலாம்.
 
பயன்படுத்தும் முறை: இதை தினமும் தூங்கும் முன்பு உங்கள் கூந்தலுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிர்வது குறைந்து, முடி நன்கு வளர்ச்சி  அடையும். முடி உடைதல் தடுக்கப்படும்.
 
ஆளி விதையை நன்கு காயவைத்து அதை அரைத்து கொள்ளுங்கள். பின்பு இதை தயிருடன் கலந்து ஹேர் பேக் போல முடியின் வேர்க்கால்கள் வரை அப்ளை  செய்யுங்கள். கூந்தல் முழுவதுமாக தடவி விட்டு, ஒரு அரை மணி நேரம் கழித்து முடியை அலசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு இருமுறை செய்தால் முடி பளபளவென இருக்கும், முடி நன்கு அடர்த்தியாக வளரும்.