வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2022 (12:57 IST)

தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவும் ஆரோக்கிய உணவுகள் !!

Thyroid
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், நல்லது.


தானியங்களில் சிவப்பு அரிசி, ஓட்ஸ்,கொள்ளு மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.முக்கியமாக இந்த உணவை தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. அத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.

தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள், காப்பர் அதிகம் உள்ள உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இத்தகைய காப்பர் கடல் சிப்பியில் அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், தைராய்டு சுரப்பி சீராக இயங்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கிலுள்ள அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க வைக்கும். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்புக் கிடைக்கும். உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செயற்பட முடியாது.