வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (18:50 IST)

வேப்ப எண்ணெய்யில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!

வேப்ப மரத்திலிருந்து உருவாக்கப்படும் வேப்ப எண்ணெய் அதிக நன்மைகள் கொண்ட எண்ணெய் ஆகும். வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன.


வாரத்திற்கு ஒரு முறை உடலில் நன்கு தடவி குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து இளைமை தோற்றத்தை அதிகரிக்கும்.

உடலில் அடிப்பட்ட இடங்களில் வேப்ப எண்ணெய்யை தேய்த்தால் சீக்கிரம் கிருமிகள் இறந்து காயங்கள் குணமாகும் தன்மை கொண்டது. பொடுகு தொல்லை நீங்க தேங்காய் எண்ணெய்யில் கொஞ்சம் வேப்பெண்ணெய் கலந்து கூந்தலுக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

வேப்ப எண்ணெய்யை உடலில் தடவி படுத்தால் கொசு தொல்லையில் இருந்து விடுபடலாம். வேப்ப எண்ணெய்யில் விளக்கை ஏற்றினால் கொசுகள் வீட்டை விட்டு ஓடிவிடும். சில சொட்டு வேப்ப எண்ணெயை நீர் சேமித்து வைக்கும் தொட்டியில் தெளித்தால் கொசு புழுக்கள் உருவாவதை தடுக்கலாம்.

தினமும் தூங்க செல்லும் முன்னர் சருமத்தில் வேப்ப எண்ணெய்யை தடவ வேண்டும். இதனால் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

குளிர்காலத்தில் வேப்ப எண்ணெய்யை சூடாக்கி அதில் கட்டி கற்பூரத்தை பொடித்துப் போட்டு அந்த எண்ணெய்யை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் வறட்சி நீங்கும்.

வேப்ப எண்ணெய்யுடன் சுத்த தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து, உடலில் தேய்த்து விட்டு இரவில் படுத்தால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளில் இருந்து தப்பிக்கலாம். சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேப்ப எண்ணெயை 2 துளி மூக்கில் விட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை தீரும்.