1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (18:44 IST)

முடி வேகமாக வளர்வதற்கும் பளபளப்பாக இருக்கவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸினேற்றங்கள் அதிகளவு இருக்கிறது. இது சேதமடைந்த முடி மற்றும் செல்கள் சரிசெய்ய உதவிகிறது. மேலும் முடி உதிர்தல், வழுக்கை, நரைமுடி பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்தாகும்.


பூந்திக்கொட்டை கூந்தலுக்கு அதிகமாக நன்மைகளை தரும். முடியை ஆழமாக சென்று சுத்தப்படுத்தும் குணம் பூந்திக்கொட்டைக்கு உண்டு.

முடியின் மயிர்க்கால்கள் வலுப்பெற்று முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். முடி வேகமாக வளர்வதற்கும் பளபளப்பாக இருப்பதற்கும் பூந்திக்கொட்டை உதவுகிறது.

சீயக்காய் காலங்காலமாக கூந்தலுக்கு பயன்படுத்தி வரும் பொருள். இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு அதிக நன்மை தரும்.

பூந்திக்கொட்டை 8, சிகைக்காய் 6, நெல்லிக்காய் 4. நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் ஊறவிடவும். பிறகு சிகைக்காய் பூந்திக்கொட்டை இரண்டையும் நீரில் ஊறவிடவும். காலையில் இதனை இலேசாக சூடாக்கி கொதி வரும் போது இறக்கி ஆறவிடவும். பிறகு இதை ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டினால் ஷாம்பு போன்று வரும். அதனை கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.