திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 மே 2023 (09:11 IST)

பாலில் எந்த மூலிகை சேர்த்தால் என்ன பயன் தெரியுமா..?

milk
ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கிய பாலில் சில பொருட்களை கலந்து குடிக்கும்போது கூடுதல் பயன்களும், மருத்துவ நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றது. அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

  • பாலில் பூண்டு சேர்த்து குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் குணமாகும்.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பாலில் பூண்டு கலந்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • நுரையீரல் அழற்சி உள்ளவர்கள் பூண்டு பால் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • பாலில் இஞ்சி கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கும்.
  • இஞ்சி பால் குடிப்பதால் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படும்.
  • பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்
  • மஞ்சள் பால் இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  • பெருஞ்சீரகம் கலந்த பாலை குடிப்பதால் மாதவிடாய் காலங்களில் வலி ஏற்படாமல் தடுக்கலாம்.