செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வாய்வுத் தொல்லை பிரச்சனையை தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள்...!!

செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய  காரணமாகும்.
வாயு தொல்லை ஏற்படும் சமயங்களில் பப்பாளி பழத்தை ஒரு துண்டை எடுத்து சாப்பிடுங்கள். இது வாயு தொல்லை சரிசெய்துவிடும். ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு தொல்லையும் குணமாகிவிடும்.
 
புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா  எண்ணெயை வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
 
மிளகு சூரணம் : மிளகை பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
 
சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும். காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக்  குணமாகும்.
 
இந்த வாயு தொல்லை நீங்க சீரகம், ஏலக்காய், சோம்பு மூன்றும் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
 
சீமை சாமந்தி தேநீர் தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.