மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
கோவைக்காயின் உவர்ப்பான சிவை வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிலருக்குச் சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி, எரிச்சல் இருக்கும். சில நேரங்களில் வாயுத்தொல்லை உடலுக்குள் உருண்டோடும். கோடைக்காய் சாப்பிடுவதன் மூலமாக இவற்றை உடனடியாக சரிசெய்யலாம்.
கோவைக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்
சர்க்கரை குறைபாட்டைத் தீர்க்க கோவைக்காய் உதவும் என்பதால், இன்று பலரும் அதனை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியிருக்கின்றனர். கோவைக்காயில் இருக்கும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் அதற்கெனத் தனியாக மாத்திரைகள் சாப்பிடுவதை ஈடு செய்கின்றன. அது மட்டுமல்லாமல், சர்க்கரை நோயினால் நரம்பு, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதையும் கோவைக்காய் சரிசெய்கிறது.
வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.