புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!

பேரீச்சம் பழத்திலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகின்றன. இதனால்  இரத்தசோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணலாம்.
பேரீச்சம் பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2,  பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துக்களும் நிறைந்துள்ளன.
 
குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம் பழத்தில் அதிகம் இருக்கின்றன. அதனால், தினமும் பேரீச்சம் பழம் உட்கொண்டால் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.
 
உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை  அதிகரிக்க உதவுகின்றன. உடல் எடையை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் பேரீச்சம் பழத்துடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து  சாப்பிடலாம். 
 
பேரீச்சம் பழத்தில் இருக்கும் தாதுக்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்புத் தேய்மானம், எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள்  தினசரி பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.
 
பேரீச்சம் பழத்தில் செலினியம், தாமிரம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகின்றன. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானப்  பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குடலிறக்கத்தையும் சீர் செய்கிறது.
 
பேரீச்சம் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, பி போன்றவை சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களைப் போக்கவும், கோடுகள்  மறையவும் உதவுகின்றன.