1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அதிக அளவு நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ள பாதாம் !!

பாதாமில் அதிக அளவு ப்ரோடீன் சத்துக்கள் உள்ளது. உடலின் வளர்ச்சி, ஆரோக்கியமான சருமம், முடி, மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு புரத சத்து மிக முக்கியம். வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு கை பிடி பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சியானது சீராக இருக்கும்.

பாதாமில் அதிக அளவு வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடல் விரைவில் வயதாவதை தடுக்க உதவுகின்றது.மேலும் வைட்டமின் இ உங்களுக்கு மின்னும் சருமத்தினை அளிக்கின்றது.
 
பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உண்டு வாருங்கள். அப்பொழுது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும்.
 
இதய ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் மிக மிக அவசியம். பாதாமில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.இவை உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கேட்ட கொழுப்புகள் அனைத்தையும் வெளியேற்றும்.
 
பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவுக்கு நார்சத்து உள்ளது. 
 
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதம் உண்டு வருபவர்களின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு தினமும் பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றத்தினை காண முடியும்.
 
பாதாமில் அதிக அளவு ப்ரோடீன், வைட்டமின் இ, இரும்புச்சத்து, மற்றும் முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு முடி கொட்டுதலை தடுத்து உங்களின் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.