சிறுமிக்கு இதயம் கொடுத்த விவசாயியின் குடும்பத்தினர்!
விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இருதயத்தை சிறுமிக்கு தானம் செய்த விவசாயியின் குடும்பத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சமீபத்தில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ( 41 வயது) ஒருவர் விபத்தால் மூளைச்சாவு அடைந்தார். எனவே அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விவசாயியின் குடும்பத்தினர் முன்வந்தனர்.
இந்நிலையில், அரியவகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு விவசாயியின் இருதயத்தை அவரது குடும்பத்தினர் தானம் அளிக்க முன்வந்துள்ளனர்.