1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூட்டுவலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவ குணம் கொண்ட முடக்கத்தான் கீரை

இந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.

 
நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி  உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. முடக்கத்தான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும்.
 
முடக்கத்தான் கீரை:
 
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய  ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக்  குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும்.
 
சிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக்கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம்  அறிவதில்லை. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் இது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு  செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள்,  சினோரியல் மெம்கிரேம் என்ற இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. 
 
சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி  இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.
 
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து சாப்பிட கூடாது.  கொதிக்க வைத்தால் மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான்  கீரையை எண்ணெய்யில் இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.
 
முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க  முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.
 
முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து  சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.