1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும் ஆடாதோடை !!

செடியாகவும் மரமாகவும் இருக்கும் இது மூலிகை குணங்கள் நிறைந்தது. இவை எங்கு நிறைந்திருக்கிறதோ அங்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடாதோடை ஆயுள் மூலிகை என்று அழைக்கப்படுகிறது.

உடல் சோர்வு, தசை பிடிப்பு, வலி போன்றவை நீங்க ஆடாதோடைஇலையை பறித்து கஷாயமாக்கி குடிப்பார்கள். அது மட்டுமல்லாமல் ஆடாதோடை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவும். 
 
சிறு குழந்தைகளுக்கு அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும்.
 
ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம். ஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறை ஆடாதோடை குடிநீர் தயாரித்து அருந்தி வர தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கி  விடும்.