செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 23 மே 2022 (18:09 IST)

உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் ஆவாரம் பூ !!

ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.


ஆவாரம் பட்டை, ஆவாரைப் பூ கொழுந்து, வேர் இவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் மூலம் குணமாகும்..
உடல் வலிமை பெற

ஆவாரம் பூ பட்டை, பனங்கல்கண்டு , வால்மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து குடித்து வர உடலில் வலிமை பெறும் சர்க்கரை நோய் கட்டுக்குள் அடங்கும்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க ஆவாரம் பூ, அசோக மட்டை, மருதம்பட்டை, ஆவாரம்பூ, திரிகடுக பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடிசெய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியானது சரியாகிவிடும்.

ஆவாரம் பூக்களுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலம் கூட்டும் தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊறவைத்து அந்த தண்ணீரை குடியுங்கள் அது தாகம் போக்கும். சிறுநீரை பெருக்கும் உடல் துர்நாற்றத்தை துரத்தும்.