வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (18:45 IST)

தூக்கம் வரவில்லையா? இதையெல்லாம் கடைபிடித்தால் செம்ம தூக்கம் வரும்..!

Sleep
ஒரு மனிதனுக்கு தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் பலருக்கு தூக்கம் வராமல் தவித்து வரும் வியாதி இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் தூக்கம் வர என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை பார்ப்போம். 
 
முதல் கட்டமாக தூங்குவதற்கு முன்னால் ஒரு டம்ளர் பால் பருகினால் நல்ல தூக்கம் வரும் என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் இரவில் படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் களைப்பு நீங்கி நன்றாக தூக்கம் வரும் 
 
மேலும் படுக்கை அறைக்கு செல்வதற்கு முன்னர் செல்போன் லேப்டாப் டிவி ஆகியவற்றை மறந்து விடுங்கள். படுக்கையில் படுத்து கொண்டே செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக தூக்கம் வராது. 
 
இரவில் உறங்குவதற்கு முன்னர் அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், இனிப்பு பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் 
 
மேலும் இரவில் தூங்கும் முன் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரை உள்ளங்காலில் மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும்
 
Edited by Mahendran