இந்தியாவில் ஜிகா வைரஸ்; 3 பேர் பாதிப்பு
இந்தியாவில் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
அமெரிக்கா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளை மிரட்டி வந்த ஜிகா வைரஸ் தற்போது குஜராத்தில் 3 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பசபிக் நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து ஜிகா வைரஸுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் ஜிகா பாதிப்பு இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அறிக்கையில் ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது. குஜராத மாநிலத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.