வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (15:12 IST)

#YSJaganFailedCM: 3 மாதத்தில் சரிந்த ஜெகன் மோகன் ரெட்டியின் செல்வாக்கு!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து டிவிட்டரில் #YSJaganFailedCM என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. 
 
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வென்று மாபெரும் வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அதன் பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். 
 
தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு போன்ற சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததால், இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய தயாராக இல்லை என கூறப்படுகிறது. 
எது தேவை எது தேவையில்லை என்ற யோசனையில்லாமல் கண்மூடித்தனமாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு செய்த திட்டங்கள் அனைத்தையும் பயனற்றதாய் ஆக்கி வருகிறார். 
 
அதேபோல, ஆந்திராவில் வெள்ளம் வந்துள்ள போதும் தற்போது எந்த வித துறித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளார் என தெரிகிறது. 
இதன் வெளிபாடே தற்போது டிவிட்டரில் #YSJaganFailedCM என்ர ஹேஷ்டேக் டிரெண்டவாதற்கு காரணமாக உள்ளது என தெரிகிறது. முதல்வரான போது ஆஹா ஒஹோ என புகழப்பட்ட இவர் 3 மாதங்களில் தனது செல்வாக்கை இழந்து ஜெகன் முதல்வராக தோற்றுவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டார்.