வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:51 IST)

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் சீரிஸ்… டைட்டில் அறிவிப்பு!

ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய வெப் சீரிஸின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தன் கைவசம் 7 முதல் 10 படங்களைக் கைவசம் வைத்திருப்பவர். அதனால் எந்நேரமும் அவர் படத்தின் ஷூட்டிங்,  படப்பிடிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் புதிது புதிதாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இப்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

இந்தியில் உருவாகும் இந்த வெப் சீரிஸில் ஷாகித் கபூர், மாஸ்டர் பட நாயகி விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த சீரிஸை ஃபேமிலி மேன் புகழ் இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இந்தியில் உருவானாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்த சீரிஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த சீரிஸ் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் இதன் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. Farzi என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ் குற்றப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.