ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (16:53 IST)

''விடுதலை'' படத்திற்கு மீண்டும் கால்ஷீட் ஒதுக்கிய சூரி, விஜய்சேதிபதி!

viduthalai set
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வரு படம் விடுதலை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த மலைப் பகுதியில் ஒரு கிராமம் போன்று செட் அமைத்து அதில் படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் சூரி மற்றும் விஜய சேதுபதி இணைந்த காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது.

இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில் அறம் படம் இயக்குனர் கோபி அய்யனார் இயக்கத்தில் உருவாகும் ஒருப் படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் வளர்ந்து வரும் நிலையில், அங்கு சென்ற வெற்றிமாறன் விடுதலை படத்தை எடிட்டிங்கை பார்த்துள்ளார்.

அப்போது, சில காட்சிகள் அவருக்கு திருப்தி இல்லாததால், படத்திற்கு இன்னும்  ஷூட்டிங் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இதுகுறித்து விஜய்சேதுபதியிடமும், சூரியிடமும் 25 நாட்கள் கால்ஷூட் கேட்டுள்ளார்.

விடுதலை படத்திற்காக ஏற்கனவே பல படங்களின் வாய்ப்பை இழந்துள்ள சூரியும், விஜய்சேதிபதியும் மீண்டும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இப்படத்தையும் வெற்றிமாறன் சிறந்த படமாக இயக்கும் நோக்கத்தில்தான் இப்படி சொல்லுகிறார் என தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.