வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 மே 2021 (14:31 IST)

ஹீலியம் பலூனில் நாயை கட்ட பறக்க விட்ட இளைஞர்!

ஹீலியம் பலூன்களில் தனது நாய்க்குட்டியை கட்டி, பறக்க விட்ட இளைஞரை டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

 
டெல்லியைச் சேர்ந்த இளைஞர் 'GauravZone' என்ற பெயரில் சேனல் நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த இளைஞர் ஹீலியம் பலூன்களில் தனது நாய்க்குட்டியை கட்டி, பறக்க விட்டபடி எடுத்த வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டிருந்தார். 
 
இதற்கு பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில் அந்த வீடியோவை டெலிட் செய்து மன்னிப்பும் கோரினார். இருப்பினும் இவர் மீது தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் காவல் நிலையத்தில் யூடியூபர் மீது வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.