1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (17:47 IST)

விமானத்தை நோக்கி ஓடி வந்த இளைஞர்...பதறிப்போன அதிகாரிகள் !

மும்பை விமான நிலையத்தில், ஒரு வாலிபர், அங்குள்ள ஓடுதளத்தில்  நின்றிருந்த விமான நோக்கி ஓடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில்,  ஸ்பைஸ் ஜெட் என்ற விமானம், பெங்களூர் செல்ல தயார் நிலையில் இருந்தது. அந்த சமயம்பார்த்து ஒரு இளைஞர் தலையில் கர்சிப் கொண்டு விமான நிலையத்தின் பின்புறமுள்ள குடிசைப் பகுதியில் இருந்து,விமானத்தை நோக்கி வேகமாக ஓடிவந்தார்.
 
பின்னர் அங்கு நின்றிந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை சுற்றிவந்து அதை தொட்டுப்பார்த்தார். இருந்த அவரை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அந்த இளைஞனை பிடித்து விசாரித்தனர்.
 
அதற்கு அந்த இளைஞர் , விமானத்தை அருகில் இருந்து தொட்டுப்பார்க்க வேண்டும் என ஆசை இருந்தது. அதனால் இப்படி செய்தேன் எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அந்த இளைஞர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிவித்தனர். 
 
அதனையடுத்து எச்சரித்து அவர்களை அனுப்பிவைத்தனர்.