1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:11 IST)

60 வயது பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபர் - புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரியில் 60 வயது மூதாட்டியை பூ வியாபாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
புதுவை சாரம் பகுதியில் வசித்து வருபவர் மேரி(60). கணவனை இழந்த அவருக்கு 4 மகள்கள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மேரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. 
 
அந்நிலையில், கடந்த 3ம் தேதி அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மேரியின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்தி மற்றும் கழுத்தை நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 
 
அதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு அடிக்கடி வருபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பூ வியாபாரியான பிரகாஷ்(30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது, மேரியை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 
சம்பவத்தன்று தென்னந்தோப்பில் தனியாக அமர்ந்து பிரகாஷ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதி வழியாக மேரி வந்துள்ளார். மேரிக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருப்பதை தெரிந்து கொண்ட பிரகாஷ் அவரை குடிப்பதற்கு அழைத்துள்ளார். அதன்பின் இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும், மேரியை உல்லாசமாக இருக்க பிரகாஷ் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மேரி அவரை கண்டபடி திட்டவே, தான் வைத்திருந்த கத்தியால் மேரியின் வயிற்றுப்பகுதியில் குத்தியுள்ளார். 
 
அதில் மயங்கி விழுந்த மேரியை பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்தவுடன் உண்மையை கூறி விடுவார் என்கிற அச்சத்தில் மேரியின் கழுத்தை நெறித்து கொலை செய்த பிரகாஷ்,  அங்கிருந்த தென்னை ஓலை மற்றும் மட்டை குவியல்களை கொண்டு அவரின் உடலை மூடி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார் என்பது தெரியவந்தது.
 
இதைத்தொடர்ந்து பிரகாஷை போலீசார் கைது செய்தனர். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.