1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (11:51 IST)

இளம் பெண்ணை கற்பழித்த காவல் அதிகாரி

சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்ற இளம்பெண்ணை, காவல் அதிகாரி ஒருவர் பலவந்தமாக கற்பழித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 28 வயதுள்ள ஒரு பெண் சிறையில் இருக்கும் தனது உறவினரை பார்க்க சென்றுள்ளார். சிறைச்சாலையில் காவல் அதிகாரி ஒருவர் அப்பெண்ணை, அவரது உறவினரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரை அழைத்துச் செல்லும் போது அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதைப்பற்றி யாரிடமும் சொல்ல கூடாது என அவரை மிரட்டியுள்ளார்.
 
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த பெண்மணி, நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து சம்பத்தப்பட்ட காவல் அதிகாரி மீது வழக்கு பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.