வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (13:55 IST)

மதுபோதையில் 7 வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் பலி

மராட்டிய மாநிலம் நவி மும்பை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மதுபோதையில் 7வது மாடியில் இருந்து கீழே விழுந்த பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 20 வயது இளம்பெண் கடடந்த புதன்கிழமை மாலை  மணியளவில் தன் நண்பர்களுடன் சேர்ந்து பில்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.

அங்கு, நண்பர்களுடன் இணைந்து இளம்பெண்ணும் மது பார்டியில் ஈடுபட்டுள்ளார்.  அனைவரும் மதுபானம் குடித்து வந்த நிலையில், இளம்பெண் 7 வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக இளம்பெண்ணுடன் மதுபான பார்டியில் ஈடுபட்ட 2 ஆண் நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.