திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (15:42 IST)

பாஜகவில் இருந்து விலகுகிறேன்: யஷ்வந்த் சின்ஹா அதிரடி அறிவிப்பு

முன்னாள் நிதியமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திரமோடியையும், அவரது ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார். குறிப்பாக மோடி அரசின் பொருளாதார கொள்கைகளையும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் அவர் கடுமையாக குறை கூறினார். இருப்பினும் சீனியர் தலைவர் என்ற முறையில் கட்சி மேலிடம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
 
இந்த நிலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக சற்றுமுன் யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார். மேலும் வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். 
 
மேலும் அரசியல் வாழ்க்கையிலிருந்து துறவறம் மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும், மோடி ஆட்சியில் பலதுறைகளில் நாடு பின்தங்கிவிட்டதாகவும் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.