செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 27 மே 2021 (07:15 IST)

கோரத்தாண்டவமாடிய யாஸ் புயல்: 1200க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு புயலாக மாறியது என்பதும் அந்த புயலுக்கு யாஸ் என்று பெயர் வைக்கப்பட்டது என்பதும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் நேற்று ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்துக்கு இடையே கரையை கடந்தது. தீவிர புயலாக மாறி யாஸ் கரையை கடந்த போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன என்பது குறிப்பிடதக்கது.
 
இந்த நிலையில் புயல் கரையை கடந்த உடன் நேற்று மாலை வலுவிழந்தது. மேலும் அடுத்த 12 மணி நேரத்திற்கு யாஸ் புயலின் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 1200 கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் ஒடிசாவில் 120 கிராமங்கள் மழைநீர் மற்றும் கடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் இதுவரை உயிர் சேதம் குறித்த தகவல் இல்லை என்பது ஒரு ஆறுதலான தகவல் ஆகும். நேற்று இரவு முழுவதும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்ட்ரோல் ரூமில் இருந்து புயல் சேதங்களை அவ்வப்போது கண்டறிந்து மீட்கும் பணி நடவடிக்கை குறித்த உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 1200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மீட்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.