புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (20:56 IST)

எழுத்தாளர் பணி எழுதுவதுதான்... பாடப்புத்தகத்தில் இடம்பெற போராடுவதல்ல - அருத்ததி ராய்

ஒரு எழுத்தாளரின் பணி எழுதுவதே தவிர பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதல்ல என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பி.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பில் பத்திரிக்கையாளர் அருந்ததிராய் எழுதிய “Walking with the Comrades” என்ற புத்தகம் பாடமாக இருந்த்து. ஆனால் இந்த புத்தகத்தில் நக்சலைட்டுகள் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த்தை அடுத்து அந்த குறிப்பிட்ட பாடம் நீக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அருந்ததிராய் பாடத்தை நீக்கியதற்கு கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 
தனது புத்தகம் நீக்கப்பட்டுள்ளது குறித்து அருந்ததி ராய் கூறியுள்ளதாவது
:
இப்போதைய அரசு, இலங்கியங்கள் தொடர்பாக அலட்சியப் போக்கு கொண்டுள்ளது மிகவும் பாதகமானது. நான் ஒரு எழுத்தாளர் என்பதால் எனது பணி எழுவதே ஆகு. பாடப்புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டி போராடுவதல்ல. இத்தனை ஆண்டுகள் மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக எனது புத்தகம் இருந்தது மகிழ்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், வாசகர்களின் ஆதரவைப் பொறுத்துதான் இலக்கியங்களின் முக்கியத்துவம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.