1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஜூன் 2023 (12:46 IST)

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீராங்கனைகள் பேச்சுவார்த்தை

டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் அவர்களுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு விட்டு மல்யுத்த வீராங்கனைகளில் சிலர் அரசு பணிக்கு சென்றதால் போராட்டம் கைவிடுவதாக கூறப்பட்டது. 
 
ஆனால் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்திருப்பதாகவும் அந்த பேச்சு வார்த்தைக்கு செல்ல இருப்பதாகவும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன் அறிவித்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியபோது ’அரசு எங்களிடம் என்ன கூறுகிறது என்பதை எங்களுடைய மூத்த வீராங்கனைகள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்வோம். அரசின் திட்டம் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட சம்மதம் தெரிவிப்போம் என்று கூறியிருந்தார்.
 
Edited by Mahendran