வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2016 (16:16 IST)

அறிவிப்புக்கு பின் பயிற்சியா? ஆட்டம் காட்டும் மோடி

எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் இன்றுவரை அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ‘மொபைல் பேங்கிங்’ குறித்து பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


 

 
எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் இன்று வரை மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மொபைல் பேங்கிக், ஆன்லைன் பேங்கிங், ஸ்பைப் மெஷின் ஆகியவற்றை பயன்படுத்த தெரிந்தவர்கள் மட்டுமே பிழைத்து கொண்டனர். 
 
இ-பரிவர்த்தனை குறித்து அறியாதவர்கள் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைதான் ஏற்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவை எடுக்கும் முன்பே நாட்டு மக்களிடையே டிஜிட்டல் பேங்கிங் குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்கப்பட்டு இருந்தால்.
மோடியின் இந்த அதிரடி முடிவு யாரையும் பாதித்து இருக்காது.
 
இந்நிலையில் பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு, மொபைல் பேங்கிங் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பணமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 
மேலும் மொபைல் பேங்கிங் போன்ற இ-பேங்கிங் வழிகள் குறித்து வர்த்தகர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.
 
பயிற்சிக்கு பின் அறிவிக்க வேண்டிய மத்திய அரசு, அறிவிப்புக்கு பின் பயிற்சி அளிக்க தொடங்கியுள்ளது.