1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified வியாழன், 12 ஜனவரி 2023 (17:50 IST)

பிரதமர் மோடி நாளை திறந்துவைக்கும் உலகின் மிக நீளமான ஆற்றுச் சொகுசு கப்பல்

modi
பிரதமர் மோடி நாளை உலகின் மிக நீளமான ஆற்றுச் சொகுசு கப்பலை திறந்துவைக்க உள்ளார்.
 

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மக்களுக்கு பல திட்டங்கள், அறிவிப்புகள் இந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி நாளை ( ஜனவரி 13) தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த சொகுசு கப்பல் நாளை வாரணாசியில் இருந்து ஆரம்பித்து 51 நாட்கள் பயணித்து, அசாம் வழி வங்கதேசத்திற்குச் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கப்பலில் 3 தளங்களும், 18 அறைகளும் கொண்டுள்ளதாகவும், இதில், 36 பேர் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.