1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (07:02 IST)

இன்று உலக கட்டிடக்கலை நாள்!

இன்று உலக கட்டிடக்கலை நாள்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை உலக கட்டடக்கலை நாள் என கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கட்டடக் கலைஞர் அன்றைய தினம் தங்களது மகிழ்ச்சியினை பிறருக்குத் தெரியபடுத்திக்கொள்வார்கள் 
 
கடந்த 2005ஆம் ஆண்டு உலகக் கட்டடக் கலை தினம் என சர்வதேச கட்டடக்கலை கலைஞர்களின் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. நமது வருங்கால நகரங்களையும் குடியிருப்புகளையும் வடிவமைப்பில் உள்ள பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகக் கட்டடக் கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் சமூக அறிவியல் அரசியல் வரலாறு தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு துறையாகும்
 
எனவேதான் கட்டடக்கலையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் திங்கட்கிழமை இந்த தினம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.