புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:08 IST)

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு? நீதிமன்றம் கேள்வி..!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதில் என்ன தவறு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
 
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு? என ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 
ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம்  கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் மக்கள் நலன் தான் மிக முக்கியம் என்றும் மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக அரசு கூறுகிறது என்றும்  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை  என  ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம்  செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva