தேர்வு அறைக்கு செல்லும் முன் தாலியை கழட்ட சொன்ன அதிகாரி
திருமணமான பெண்கள் தேர்வு எழுத தேர்வறைக்குக் செல்லும் முன் தாலியை கழட்ட சொன்ன அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வு நடைபெற்றது. அப்போது தாலியை கழட்டிவிட்டுத்தான் தேர்வு அறைக்கு செல்ல வேண்டும் என தேர்வு அதிகாரி வற்புறுத்தியதால் வேறு வழியின்றி தேர்வு எழுத வந்த பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்களிடம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தாலி இந்து பெண்களின் பாரம்பரியம் என்றும், தாலியை கழட்டினால் கணவருக்கு ஆபத்து என செண்டிமெண்ட்டாக ஒருசில பெண்கள் தேர்வு அதிகாரியிடம் கெஞ்சியும் தேர்வு அதிகாரி கறாராக இருந்த கண்ணீருடன் ஒருசில பெண்கள் தாலியை கழட்டி விட்டு பின் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதும் பெண்களில் ஒருசிலர் தங்களின் தாலியில் ஒருசில எலெக்ட்ரானிக் டிவைஸ் வைத்து அதன்மூலம் முறைகேடாக தேர்வு எழுதுவதாக வந்த புகார்களை அடுத்தே தேர்வு அதிகாரி இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தேர்வுத்துறை இயக்குநர் கூறும்போது, தேர்வு எழுத வரும் பெண்கள் தாலியைக் கழற்ற வேண்டும் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் விதிமுறைகளை தவறாகப் புரிந்துக்கொண்ட தேர்வு மைய அதிகாரிகள், இதுபோன்று செயல்பட்டு இருக்கலாம். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறினார்