1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (18:04 IST)

சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

ias ips
சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!
சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட பெண் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மற்றும் ஐபிஎல் அதிகாரியை ரூபா இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டிக் கொண்டனர் 
 
பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரை ரோகிணி சந்தித்ததாக புகைப்படத்தை ரூபா ஐபிஎஸ் வெளியிட்டார். அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலருக்கு ரோகிணியின் அந்தரங்க புகைப்படங்களை whatsapp மூலம் ரூபா அனுப்பியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் இரு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு இணையதளங்களில் வைரலானதை அடுத்து இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva