ஆம்புலன்ஸ் தாமதம்; நடுரோட்டில் பெண்ணுக்கு பிரசவம்: உபி-யில் சர்ச்சை!!
உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பெண்ணுக்கு சாலையில் பிரசவம் பார்த்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள சோனே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அதனால், அக்கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணை நடைப்பயணமாக சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். நேரம் கடந்தபின்னரும் பின்னரும் அம்புலன்ஸ் வருவதாய் தெரியவில்லை.
இதனிடையே பெண்ணுக்கு வலி அதிகமாகியதால், உடனிருந்த பெண்கள், சாலையிலேயே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.