வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:55 IST)

அடப்பாவமே !! பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த வாலிபர்

தெலங்கானா மாநிலம் வாரன்கல் அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்நிலையில், இக்கிராமத்தை அடுத்த சென்னரம் என்ற ஊரில் வசிப்பவர் அவினாஷ். இவர் அம்மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ஏற்க மாணவி மறுத்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் ஆத்திரமடைந்த அவினாஷ் சாலையில் சென்றுகொண்டிருந்த மாணவியை வலுக்கட்டாயமாகப்  பிடித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
 
தீயில் எரிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்ட பொதுமக்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
உடலில் முக்கால் வாசி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
தற்போது  கைது செய்யப்பட்டுள்ள அவினாஷ் மீது  போலீஸார் வழக்கு பதிவு செய்து அவனிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.