ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (11:40 IST)

விமானப்படை பெண் விமானிக்கு பாலியல் தொல்லை: விங் கமாண்டர் மீது பாலியல் வழக்கு..!

விமானப்படை பெண் விமானிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் விங் கமாண்டர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புட்காம் என்ற காவல் நிலையத்தில் விங் கமாண்டர் மீது பெண் விமானி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள.

 ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை அதிகாரிகள் கூட்டரங்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற போது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததாக விமானப்படை பெண் விமானி புகார் அளித்துள்ளார்.

தனது அறைக்கு வந்து பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளுமாறு அழைத்ததின் பேரில் பெண் விமானி அந்த அறைக்கு சென்றதாகவும் அங்கு விங் கமாண்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva