செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:02 IST)

மதிய உணவில் செத்து கிடந்த எலி : மாணவர்கள் உடல்நலம் பாதிப்பு ...அதிர்ச்சி சம்பவம் !

உத்தரபிரதேச மாநிலத்தில், அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு  வழங்கப்படும் மதிய உணவில் எலி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச  மாநிலத்தில், சில நாட்களுக்கு முன்,  ஒரு அரசுப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் கீழ் ஒரு லிட்டர் பாலில், நிறைய தண்ணீர் ஊற்றி, சுமார் 81 மாணவர்களுக்குக் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில்,  உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹபூரில் ஜன்கல்யான் சன்ஸ்தா கமிட்டி என்ற அரசு சாரா அமைப்பில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை படிக்கின்ற மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டது.
 
அந்த உணவு இன்று மதியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் சாதத்தை எடுத்து சாப்பிடுகையில் உணவில் எலி ஒன்று இறந்து கிடத்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த உணவை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அவர்களை  ஆசிரியர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
இந்நிலையில், முசாபர் மாவட்ட ஆட்சியர், இந்த உணவு  வழங்கிய அமைப்பின் மீது, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.