1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (14:08 IST)

லடாக் எல்லையில் நடந்தது என்ன? பிரச்சனையை துவங்கியது யார்?

லடாக் எல்லையில் என்ன நடந்தது என்பது பற்றி இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் போர் பதற்றம் இருந்தது என்பதும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். 
 
இதனையடுத்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார். சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு பதிலடியும் இந்திய தரப்பில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது குறித்து இந்திய ராணுவம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படை வெளியேறும் போது வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். 
 
இந்திய வீரர்கள் மூவர் வீர மரணம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், சீனாவின் தாக்குதலில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல். இந்த மோதலை அநேகமாக சீன துவங்கி இருக்க கூடும் என தெரிகிறது. 
 
அதேசமயம் சீனா தரப்பிலும் 5 வீரர்கள் இறந்துள்ளதாகவும், 14 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது.