ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 13 மே 2019 (10:49 IST)

கள்ளக்காதலிக்கு அயன் பாக்ஸில் சூடு... சந்தேக புத்தியால் கணவன் - மனைவியின் வெறிச்செயல்

கள்ளக்காதலியின் மேல் எழுந்த சந்தேகத்தால் அவரது பிறப்புறுப்பில் அயன் பாக்ஸ் வைத்து சூடு போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத் மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. கமலேஷ் என்பவர் திருமணமாகி தனது மனைவியுடன் இருந்து வந்துள்ளார். கமலேஷ் வசித்து வந்த பகுதியில் விவாகரத்தான இளம் பெண் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.
 
அந்த இளம்பெண்ணுக்கும் கமலேஷுக்கும் நட்பு ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. எனவே, கடந்த ஒரு வருடமாக கமலேஷும் அந்த இளம் பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். 
இந்நிலையில் திடீரென அந்த இளம்பெண்ணின் நடத்தையில் கமலேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கமலேஷ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் சண்டைக்கு சென்றுள்ளார். 
 
அப்போது வாக்குவாதம் முற்ற, ஆத்திரத்தில் கமலேஷ் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டு தனது மனைவியை அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் அயன் பாக்ஸில் சூடு வைக்க செல்லியுள்ளார். மனைவியும் அதேபோல் செய்ய வலியால் துடித்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கினார். 
 
இதனால் அங்கிருந்து இருவரும் தப்பி ஒடினர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், கமலேஷ் மற்றும் அவரது மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.