செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (16:54 IST)

ஊரடங்கு இல்லாமல் போயிருந்தால்...இதுதான் நடந்திருக்கும் - சுகாதார செயலர் தகவல்!

சீனாவில் இருந்து பல்வேறு  உலகநாடுகளில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் எனவும், இன்று இரவு நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றுவார் என தகவல் வெளியாகிறது

தற்போதுவரை இந்தியாவில் 7600 மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 249 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் இதுவரை 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,  நேற்று மட்டும் 16,564 சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை  செயலர் லாவ் அகர்வால்  கூறியுள்ளதாவது : இந்தியாவில், ஊரடங்கு உத்தரவு இல்லாமல், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுத்திருந்தால் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளார்.

இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. அதில் பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..