கர்நாடகாவிலும் சிக்கலை ஏற்படுத்திய ரஜினி அறிவிப்பு
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூடும் என காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக மற்றும் தேவகவுடா தலைமையிலான ஜனதாதள் கட்சிகள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுள்ளனர்.
ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு கர்நாடகாவிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனமீக அரசியல் செய்ய போவதாக ரஜினி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரஜினி அரசியலுக்கு வர போவதாக அறிவித்ததை அடுத்து அவர் பாஜக கூட்டணி வைப்பார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
ரஜினிக்கு கர்நாடக மாநிலம் தமிழர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரஜினியை வைத்து பாஜக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக கூறியுள்ளார். இதனிடையே அது வரை அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட போவதில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இதனால் ரஜினிகாந்த கார்நாடகாவில் பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கி பிரச்சாரம் செய்வாரா என்பது கேள்விகுறியாக உள்ளது. மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, பிரதமர் மோடியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரஜினிகாந்த் ஆதரவாக இருந்தார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.