ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2018 (16:03 IST)

நாளை முழு சந்திர கிரகணம்; 3 அரிய நிகழ்வுகள்

150 ஆண்டுகளுக்கு பிறகு 3 அரிய நிகழ்வுகளுடன் நாளை முழு சந்திர கிரகணம் நடக்க உள்ளது. முன்னதாக 1886ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரகணம் நாளை மாலை 6.25 மணிக்கு தொடங்கி 7.25 மணிவரை நீடிக்கும். வழக்கமாக தோன்றும் சந்திர கிரகணம் போல் அல்லாமல் இந்த முறை புளூ  மூன், பிளட் மூன், சூப்பர் மூன் ஆகிய மூன்று வகையில் சந்திரன் காட்சி அளிக்கும்.
 
சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மீது முழுமையாக விழுவதால் சந்திர கிரகணம் நிகழ்கிறது. மாதத்தின்  இரண்டாவது பெளர்ணமி என்பதால் சந்திரன் நீல நிறத்தில் காட்சி அளிக்கும்.
 
சந்திரன் மீது சூரியனின் ஒளி நேரடியாக படாமல் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு சிகப்பு நிறம் மட்டும் சந்திரன் மீது விழும், இதனால் நீலநிற சந்திரன்,  சிகப்பு நிறமாக மாறும் இது பிளட் மூன் என்று அழைக்கப்படும்.
 
நிலா பூமியை சுற்றி வரும்போது மாதத்திற்கு ஒரு முறை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது நிலா வழக்கத்தை விட பெரிதாகி சூப்பர் மூன் ஆக காட்சி  அளிக்கும். அப்போது நிலா வழக்கத்தை விட 10 சதவீதம் பெரிதாக நிலா காட்சி அளிப்பதோடு, சற்று பிரகாசமாகவும் தெரியும்.
 
இந்த அரிய சந்திர கிரகணம் இந்தியா முழுவதும் தெரியும். இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம் எனவும் வானியல் வல்லுநர்கள்  தெரிவித்துள்ளனர்.