1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (14:53 IST)

திருமண நாளன்று பரிசு தராத கணவரை கொலை செய்ய முயற்சி: மனைவி மீது வழக்குப்பதிவு!

Knife
திருமண நாளன்று தனது கணவர் தனக்கு பரிசு தரவில்லை என்ற ஆத்திரத்தில் கணவர் தூங்கும் போது அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பெங்களூரைச் சேர்ந்த கணவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தர முடியவில்லை என்று கூறியுள்ளார். காரணம் திருமண நாளன்று கணவரின் தாத்தா உயிர் இழந்ததால் அந்த வருத்தத்தில் அவர் பரிசு வாங்கி தரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் திருமண நாளில் பரிசு வாங்கி தராத ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கொலை செய்யும் முயற்சியில் அவரை கத்தியால் குத்த அவரது மனைவி முயற்சித்துள்ளார் 
 
கத்திக்குத்தால் படுகாயம் அடைந்த கணவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெங்களூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva