வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (12:05 IST)

கரும்பு தோட்டத்தில் கணவன் கண் முன்னே மனைவியை சீரழித்த காம வெறியர்கள்!

கரும்பு தோட்டத்தில் கணவன் கண் முன்னே மனைவியை சீரழித்த காம வெறியர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் கண் முன்னே அவரது மனைவியை காம வெறியர்கள் கரும்பு தோட்டத்தில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
உத்திரப்பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் தம்பதிகள் இருவர் தங்கள் மூன்று மாத குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் குழந்தையை காட்டிவிட்டு வீடு திரும்பியபோது வழியில் இவர்கள் வந்த வாகனத்தை கார் ஒன்று வழிமறித்துள்ளது.
 
இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த தம்பதிகளிடம் இருந்து குழந்தை பறித்தனர். அதனை தடுக்க முயன்ற கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் கட்டிப்போடு கரும்பு தோட்டத்தக்கு தூக்கி சென்றுள்ளனர்.
 
அந்த கரும்பு தோட்டத்தில் கணவர் கண் முன்னே அவரது மனைவிய அந்த நான்கு கொடூரர்களும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். சத்தம் எழுப்பினால் குழந்தையை கொன்றுவிடுவோம் என மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
 
இதனையடுத்து அவர்களது சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்த விவசாயிகள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.