வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (13:05 IST)

காதலனுடன் உல்லாசம்; நேரில் கண்ட கணவன் கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொலை

கர்நாடக மாநிலத்தில் காதலுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்து கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மைசூர் மாவட்டம் உன்சூர் பகுதியில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து விசாரணையை துவங்கிய போலீஸார் அது சிவகுமார் என்பவரின் உடல் என்பதை கண்டுபிடித்து அவரது மனைவி திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திவ்யா திருமணத்திற்கு முன்னர் சேத்தன் என்பவரை காதலித்துள்ளார். ஆனால், சில காரணங்களால் திவ்யா சிவகுமாரை திருமணம் செய்துள்ளார். காதலனை மறக்காத திவ்யா கணவன் வாங்கிக்கொடுத்த போனை பயன்படுத்தி பேஸ்புக் மூலம் சேத்தனுடன் தொடர்பில் இருந்துள்ளார். 
அதோடு நிறுத்தாமல் கணவன் வீட்டில் இல்லாத போது சேத்தனை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். எதிர்பாராத விதமாக இதை சிவகுமார் பார்த்துவிட்டு மனைவி திவ்யாவை கண்டித்துள்ளார். ஆனால், திவ்யா காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் திவ்யா, சேத்தன் மற்றும் கூலிப்படை கும்பலையும் கைது செய்துள்ளனர். கூலிப்படை தலைவனை தேடி வருகின்றனர்.