வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (13:30 IST)

ஆன்லைனில் சீட்டு விளையாடியதால் தம்பதி தற்கொலை ? பகீர் தகவல்

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை என் ஜி ஓ காலனி அன்னை தெரசா காலனியைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம் (40). அவருடைய மனைவி மீனாட்சி (36). இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. 
வெங்கடசுப்பிரமணியம் முனைவர் பட்டம் பெற்றவர் . அவர் அங்குள்ள பகுதியில் தொழில்முனைவோருக்கான பயிற்சிமையம் நடத்திவந்தார். 
 
அப்போது அவருக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் வெங்கடசுப்பிரமணியமும் அவரது மனைவியும் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து இரு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
 
பின்னர் விரைந்து வந்த போலீஸார் வீட்டை திறந்து பார்த்தனர், உள்ளே வெங்கடசுப்பிரமணியமும் அவரது மனைவியும் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தம்பதி கடன்பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்தது.
 
மேலும் வெங்கடசுப்பிரமணியம் ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாகவும், இதனால் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதாகவும், அதனால் தம்பதி தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் காட்டுத் தீ போன்று பரவியது. 
 
இதன் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.